முல்லைத்தீவு காட்டில் காணாமல் போயிருந்த பல்கலை மாணவர்கள் மீட்கப்பட்டனர்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் காணாமல் போயிருந்த ஒன்பது பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினருடன் கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையினைத் தொடர்ந்தே அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒன்பது பல்கலை மாணவர்கள் அடங்கிய குறித்த குழுவினர் நேற்று முத்தையன்கட்டு வனப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் வழிதவறி காணாமல் போயிருந்தனர்.

இதன்பின்னர், அவர்களைக் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் அடங்கிய மீட்புக் குழுவினர் குறித்த அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதலை மேற்கொண்டபோது மாணவர்கள் ஒன்பது பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.