மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.
ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் (தங்கத்தாத்தா) படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக அலுவலர்களினால் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்னும் பாடலும் இசைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரோனா’ அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றி 2020ஆம் ஆண்டுக்கான ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை