தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து அறிவிக்க விசேட பிரிவு
பொதுத் தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை நிறுவியுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளையும் அந்த பிரிவு மேற்கொள்ளவுள்ளது.
பொதுமக்கள் 24 மணிநேர துரிதசேவையான 1996 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை குறித்த விசேட பிரிவிற்கு அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை எழுத்துமூலமாக முன்வைக்க விரும்பும் பட்சத்தில் அலகுக்குப் பொறுப்பான அதிகாரி, தேர்தல் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் அலகு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலக்கம் 14, ஆர்.ஏ.மெல் மாவத்தை, கொழும்பு – 04 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
அத்தோடு அந்த எழுத்துமூலமான முறைப்பாடுகளை 011 2505574 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது iihrcsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்க முடியும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை