வெல்லாவெளியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் உயிரிழந்துள்ளது.

விவேகானந்தபுரம் தளவாய்கல் குளம் பகுதியிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) காலை  குறித்த யானை உயிரிழந்த நிலையில்  காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் குப்பைகொட்டும் இடமுள்ளதாகவும் அங்குவந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுக்கும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் குறித்த யானையின் சடலத்தினை அங்கிருந்து மீட்கும் நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்தது.

மனிதர் மோதல்களுக்கு இடையில் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று யானைகளும் அடிக்கடி பாதிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.