யாழில் கொள்ளையன் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 35 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நிலையில் சின்னவன் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

வவுனியாவில் சங்கிலி அறுப்பு குற்றத்துக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

தனது மனைவியை கொண்டு சென்றவரைக் கொலை செய்யும் நோக்குடன் சந்தேக நபர், உரும்பிராய் ஊடாக சாவகச்சேரிக்கு மற்றொருவருடன் பயணித்த போது, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபரின் இடுப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.

அத்துடன், கொள்ளையிடப்பட்ட  16 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை கொள்வனவு செய்த, உடமையில் வைத்திருந்த, விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.