கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
யாழப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் இந்த விஞ்ஞாபனம வெளியிடப்பட இருக்கின்றது.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த விஞ்ஞாபன வெளியீட்டினை தொடர்ந்து, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் யாழ்.மாவட்டத் தொகுதி ரீதியிலான பிரசாரக் கூட்டங்களும் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது/
கருத்துக்களேதுமில்லை