ஹைலெவல் வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

மழையுடனான வானிலை காரணமாக கிருலப்பனை பேஸ்லைன் சந்தியில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஹைலெவல் வீதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை,தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பிற்குள் நுழையும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது..

சீரற்ற காலநிலையால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமாடுவ மற்றும் பின்னடுவா பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாட்டில் மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.