மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் மோதல்: ஒருவர் காயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் இரு குழுவினருக்கு இடையில்  மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய- செவனகல பகுதியில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த கூட்டத்தில்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வெல்லவாய அமைப்பாளர் உரையாற்ற ஆரம்பித்த வேளையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.  இதன்போது அமைப்பாளரின் மகன் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

அப்போது கூட்டத்திற்கு வகை தந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஆதரவாளர்களை பொறுமையுடன் செயற்படுமாறு  வலியுறுத்தியதுடன், பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தங்கள் மத்தியில் மோதிக்கொள்ளக்கூடாது ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.