ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பயணித்த இரு வாகனங்களுக்கு சேதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயணித்த இரு வாகனங்களும் மஹரகமயில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அவரின் வாகனத்திற்குப் பின்னால் பயணித்த பாதுகாப்பு வாகனத்தின் மீது முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதனால் பின்னால் வந்த வாகனம், முன்னால் பயணித்த வாகனத்துடன் மோதியுள்ளது. இதனால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை