பொருளாதாரத்திற்கும் வேலையற்றவர்களுக்கும் கைகொடுக்க வேண்டும் – ரணில்
விவேகமுள்ள கொள்கைகளை அமுல்படுத்தாமல் தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து வெற்றிகொள்ள முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளின் அவல நிலையை தற்போதைய அரசாங்கம் புறக்கணித்துள்ளது எனறும் குறிப்பிட்டார்.
அத்தோடு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க வேலையற்றவர்களுக்கு உதவ பல தீர்வுகளையும் முன்மொழிந்தார்.
கருத்துக்களேதுமில்லை