ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் நாட்டின் பெரும்பாலான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இதற்கு காரணம், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐ.தே.க. தோல்வியடையும் என்பதை அறிந்தே தேசிய பட்டியலை அவர் தெரிவு செய்துள்ளார்.
மேலும் அவர்கள் சிறிகொத்தவை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம்தான் மக்களிடம் வாக்குகளை கோருகின்றனர். இவர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லமாட்டார்கள்.
எனவே மக்கள், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்வது சிறந்தது என்பதை சிந்தித்து தங்களது வாக்குகளை வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை