கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நீண்டகாலமாக இருந்துவந்த குறித்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் தொழிலாளர்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு பலநாள் மீன்பிடி கலங்கள் உள்ளிட்ட பல மீன்பிடிக் கலங்கள் அத்துறைமுகத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.
அத்துறைமுக நிர்வாகத்தினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு குறித்த விடயத்தை கொண்டுவந்திருந்தனர். இந்நிலையிலேயே இன்றையதினம் எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த உடன்படிக்கையில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் வடிவேலு சத்தியநாதன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இடையே கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை