கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 03 பேர் சவூதி அரேபியாவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் ராஜங்கனய நோயாளியுடன் தொடர்புடையவர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2041 பேர் குணமடைந்துள்ளதோடு 673 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 119 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.