கல்லடி சமுகத்தின் பேராதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஸ்ரீநேசனுக்கான தேர்தல் பிரச்சார பணிகள்
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசனின் தேர்தல் பரப்புரைகள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றன.
பாராளுமன்ற உறுப்பினரால் கல்லடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளின் விபரங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களுடன் கல்லடி வாழ் சமுக மட்ட அமைப்புகளின், பிரதிநிதிகளும், இளைஞர்களும் இணைந்து பிரச்சார பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் கடந்த காலங்களில் தமது பிரதேசத்தில் மேற்கொள்ளபட்ட மக்கள் பணிகளுக்கு கல்லடி சமுகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, இம்முறையும் தமது பூரண ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனுக்கும் வழங்குவதாக உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை