சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்…

சுமந்திரனின் பொய் காரணமாக  மக்கள் அவரை நிராகரிப்பர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  வேட்பாளர்களை ஆதரித்து இன்று(24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

இன்றைக்கு சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைவார்.இவர் தனது கட்சி தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்டவர்.இவருடன் நான் எப்படி விவாதத்திற்கு சென்று மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க போவதில்லை.நான் ஒரு கட்சியின் தலைவர் .சுமந்திரன் என்பவர்  என்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லை.இவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில் தனது முகத்தை தற்போது ஒளித்துக்கொண்டு திரிகின்றார்.அத்துடன் தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.