கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் குணமடைவு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 103 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை இரண்டாயிரத்து 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை