கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 15 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 121 பேர் குணமடைந்துள்ள நிலையில், 650 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை