ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசே நாட்டின் மதிப்பை அதிகரித்தது – பிரதமர்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தினாலேயே புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அமைக்கப்பட்டு நாட்டின் மதிப்பு அதிகரித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டின் வளங்களை நல்லாட்சி அரசாங்கமே விற்றது எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டில் வளங்கள் அதிகரித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த, நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அந்த வளங்களை குறைந்த விலைக்கு விற்று தங்கள் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
எவ்வாறாயினும், ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தமையின் பின்னர் அந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஆகவே எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதியுடன் பணியாற்றக்கூடியதும் அவரின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்லத் தயாராக உள்ள தரப்பையே நாடாளுமன்றத்திற்கு மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..
கருத்துக்களேதுமில்லை