போதைப்பொருட்களுக்கு முடிவுகட்ட மின்னஞ்சல், தொலைநகல் அறிமுகம்…

போதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்குவதற்காக 1997, 1917 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையிலேயே, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை 1997@police.lk  எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக வழங்க முடியும். குற்றச்செயல் கும்பல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை 1917@police.lk  எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக வழங்க முடியும்.

அத்தோடு, 011 2440 440 எனும் தொலைநகல் இலக்கம் ஊடாகவும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.