ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது தாக்குதல்: விசாரணையை முன்னெடுக்குமாறு ஜே.வி.பி வலியுறுத்தல்

ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தொழிலை இழந்த நிலையில்,  ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள், நாட்டுக்கு  திருப்பி அனுப்புமாறு கோரி முன்னெடுத்த போராட்டத்திலேயே பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுனில் ஹந்துநெத்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜோர்தானிலுள்ள சுமார் 250இலங்கையர்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு  இலங்கை தூதரக அதிகாரிகள், நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனரா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் இலங்கையர்கள் மீது  தாக்குதலை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது யார் என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.