2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் – எம்.எல்.ஏ.,கருணாஸ் கோரிக்கை…

2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப்  பணியமர்த்த வேண்டும்

 எம்.எல்.ஏ., கருணாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கடந்த ஆண்டு 2019 இல் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்வானவர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2019இல் இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவைகளில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு 2020ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  அதை கருத்தில் கொண்டும், தற்போதைய  சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

2019-20 இல் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, 2019-20ல் நடந்த காவலர் பணிக்கான அனைத்து தகுதிச் சுற்றுக்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவலர் காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.