உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது – சாணக்கியன் உறுதி…
உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது –
சாணக்கியன் உறுதி!
உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த
விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “இளைஞர்கள் தமிழ்த் தேசியத்தையும்
காப்பதற்காகவும் மக்களின் அபிவிருத்திக்காக அரசியலில் களமிறங்குவது
அரசியலால் இன்னும் சுய இலாபத்தைத் தேட நினைக்கும் வஞ்சகர்களுக்குப்
பொறுக்கவில்லையா?
இளம் பருவத்தில் நான் அரசியலில் காலடியெடுத்து வைத்ததா என் தவறு…?
க்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று நினைப்பவருக்கு வயது தேவையில்லை
என்பதை உணருங்கள்.
மக்களுக்கு சேவையாற்ற நினைக்கும் எனக்கு அவப்பெயர் உண்டாக்கினால்
உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி அல்லது சுயலாபம் என்ன என்பது இன்னும் நான்
அறிந்திராத ஒரு புதிர் தான்.
தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த பின்னும் என்னை தீண்ட நினைக்கும் சில
விஷமிகள் என்னைப் பற்றிய தவறான விடயங்களைப் புனைந்து மக்கள் மத்தியில்
துண்டுப்பிரசுரங்களாகவும், விளம்பரங்களாகவும் வெளியிடுகின்றனர்.
மாற்று கட்சி வேட்பாளர்களுடன் எனது பெயரையும் இணைத்து முற்றிலும் பொய்யான
தகவல்களை பரப்புகின்றனர். இரவு நேரங்களில் துண்டு பிரசுரங்களை முக்கிமான
இடங்களிலும் பிரதானமாக மக்கள் கூடும் வீதிகளிலும், பிரதான வீதிகளிலும்
எறிந்து விட்டு செல்கின்றனர்.
இவற்றிற்கு எதிராக எவ்வித சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளாத பொலிஸார்.
தமிழர்களுக்காக நான் செய்யும் நற்செயல்களுக்குக் கூட எனக்கு எதிராக
வழக்குப் பதிவிடுகின்றீர்கள்.
என்னிடம் உங்களைப்போல் ஒட்டுக்குழுக்களில் கொலை மற்றும் கொள்ளைகளில்
ஈடுபட்டு இவ்வாறான காரியங்களை செய்யும் அதரவாளர்கள் இல்லை. என்னிடம்
இருப்பது மிகவும் பண்பான எனதுயிர் தமிழ் மக்களின் பலம் மட்டுமே.
நான் என் மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடனேயே அரசியலில் காலடியெடுத்து
வைத்தேன். உங்களையோ உங்களது அரசியல் நாடகத்தையோ நான் விமர்சித்து நான்
அரசியல் செய்யவில்லையே.
இவ்வாறான போலியான வதந்திகள் நிறைந்த துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதனால்
மக்களுக்கு என்னில் இருக்கும் நம்பிக்கை தளர்ந்து விடும் என்னுடைய வெற்றியை
நிறுத்தி விடலாம் என்ற அவ நம்பிக்கையில் இத்தகைய வஞ்சக செயல்களில்
ஈடுபடுகிறீர்கள்.
நீங்கள் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கின்ரீர்கள். நான் என் மக்களில்
வைத்திருக்கும் நம்பிக்கையும் மக்கள் என்னில் வைத்திருக்கும் நம்பிக்கையும்
எப்போதும் கறைபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் பிறர் மனதைப் புண்படுத்த
வேண்டும், பிறர் வளர்ச்சியை அழிக்க வேண்டும் எனும் எண்ணத்தை அழித்து தமிழ்
இனத்தின் விடுதலைக்காக மற்றும் அபிவிருத்திக்காக பயணியுங்கள்.
இப்படியான சில்லறைத்தனமான காரியங்களை செய்து எம் மக்களின் எதிர்கால கனவுகளை
சிதைக்காதீர்கள். மக்களுக்கு தெரியும் நீங்கள் பதவிக்கு வந்தால் என்ன
செய்வீர்கள் என்று. அதனை மக்கள் நாளை பார்த்துக்கொள்வார்கள்.
எனது மக்கள் என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் எனது திறமைகளை
பற்றியும் முழுவதுமாக விளங்கிக்கொண்டுள்ளனர் என் இலட்சியம் என் தமிழ்
மக்களுக்கு தொண்டாற்றுவதே. தமிழுக்கே என் உயிர். இதை நினைவில் கொள்ளுங்கள்“
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை