பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் விடுத்த வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ். மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) தனது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்து இருக்கின்றது. தமிழ் மக்கள் வாக்குகளால் மட்டும். அதேபோல் அதிகூடிய விருப்பு வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான் கிடைத்துள்ளது.

இதனை தேசிய கட்சி என்று பார்க்கவில்லை. உண்மையாக மக்கள் வேலை செய்யகின்றார்களா? என்று பார்க்கின்றனர். இவற்றில் 5 வருடங்களுக்குள் என்ன செய்ய போகின்றார்கள் என்று பார்க்கின்றார்கள். அதற்கான தெரிவினை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபாண்மை மக்களிடம் பிரதித்துவம் படுத்தியதே இல்லை. இது நாங்கள் செய்கின்ற வேலைத் திட்டத்திற்கு, செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத் தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதில் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகள் முன்னோக்கி போகவேண்டும். அதுவே காலத்தின் தேவையாக உள்ளது. இது எனது கட்சிக்கும் மட்டும் இல்லாமல், இவை அனைத்து யாழ். மாவட்டத்தில் பிரதித்துவம்படுத்தும் கட்சியாளர்களும் இந்த செய்தி நல்செய்தியாக அமைய வேண்டும். இவை காலத்தின் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.