அமைச்சு பதவியை பெற்ற நாமலின் கருத்து!

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு தான் பெருமைப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முக்கப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.