லங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு
இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக போட்டிகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச வீரர்களை இலங்கைக்கு வரவழைப்பது கடினம் என்பதால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
நாங்கள் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம், நாட்டிற்குள் நுழையும் எவருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் கட்டாயமாகும். எனவே ஆகஸ்ட் மாத இறுதியில் போட்டியை நடத்துவது கடினமாகும்.
ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் நவம்பர் மாத நடுப்பகுதியில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த மீண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை