பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமை துரதிஸ்ட வசமானது
வன்னியில் யுத்தத்தால் பாதிப்படைந்த நிலையில் பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள போதும் அவர்கள் தமக்கான ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்த இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமை துரதிஸ்ட வசமானது. யுத்தத்தால் பாதிப்படைந்த நிலையில் பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள போதும் அவர்கள் தமக்கான ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது. இருப்பினும் என்னையும் தமது குரலாய் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற சிந்தகையில் பல பெண்கள் மட்டுமன்றி வன்னி மக்கள், நான் போட்டியிட்ட ஐக்கிய மக்கச் சக்திக்கும் எனது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்துள்ளார்கள். நான் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படாவிட்டாலும் எனக்காக வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள்.
பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான எனது சேவைகள் தொடரும். அம்மக்களுக்காக தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன். ஆகவே, மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க தொடர்ந்தும் எம்முடன் கரம் கோருங்கள். உங்களுக்காக ஒரு பெண்ணின் குரலாய் எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை