தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம்: 2 கட்சிகளின் இழுபறிக்கு முடிவில்லை

புதிய அரசின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை கூடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமலுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின்  பெயர்களே இதுவரையில் உறுதி செய்யப்படாமல் உள்ளன.

இந்தநிலையில், நாளை 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், தேசியப் பட்டியல் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதித் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.