இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
வவுனியா நிருபர்
வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 65000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுள் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இ.போ.சபையின் மன்னார் சாலையில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே அங்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட வட பிராந்திய போக்குவரத்து முகாமையாளரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை