மெலிஞ்சிமுனை மக்களின் 70வருட கால குடிநீர் தாகத்திற்கு அங்கஜன் மூலம்  தீர்வு

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை கிராம மக்களுக்கு 70 வருடகாலமாக தீர்க்கபடாமல் இருந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் முகமாக  கடந்த வருடம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றைய தினம் (20) காலை அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்களால் நீர் சுத்தகரிப்பு நிலையமும் சுத்தகரிப்பு இயந்திர சாதனங்களும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு நன்னீரும் மக்களுக்கு விநியோகிக்கபட்டது.
இந் நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்,  உதவி பிரதேச செயலாளர்,  திட்டமிடல் பணிப்பாளர், அப் பகுதி கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் பலந்து கொண்டனர்.
கடந்த 70 வருட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் குடிநீர் தாகத்தை தீர்த்து வைத்தமைக்கு அப் பகுதி மக்கள் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.