சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்த பத்து பேர் கைது

(க.கிஷாந்தன்)

சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து தோட்டப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்த பத்து பேரை, 20.08.2020 அன்று மாலை  கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து  32,684 சுருட்டுகளையும் மீட்டுள்ளதாக அட்டன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்தனர்.

அட்டன் மதுவரித் தினைக்களத்துக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட  32,684 சுருட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு சுருட்டு பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் விற்பனை செய்யப்பட்ட சுருட்டுகளில் லேபல் எதுவும் ஒட்டப்பட்டிருக்கவில்லை எனவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.