35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் நியமிக்கப்பட்டனர் செயலாளர்கள் – ஒருவர் மட்டுமே தமிழர்
கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவையால் இந்த நியமனங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயலாளர்களில் ஒருவர் மட்டுமே தமிழராவார். வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை