அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம்.
மலையகத்தின் மாமனிதன் என்று அழைக்கப்படும் மூத்த தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதியான அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம் 30.08.2020 அன்று கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.
ஜனன தினத்தை முன்னிட்டு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் மலையக வரலாறு பற்றிய பல அபூர்வ தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் காணொளி காட்சிகளுடன் கூடிய மாபெரும் ஆவணக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை