விசாரணைக்கு வருமாறு ரோகணவுக்கு அழைப்பு!
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.
பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று சுமார் 13 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை