ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராயும் குழு முன்னிலையில் ஆஜரானார் ரணில்!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வருமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் இன்று காலை அங்கு சென்றுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் குழுவினர், 9 மணி நேரம் விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை