தொழிலற்ற பட்டதாரிகளுக்கு/டிப்ளோமா தாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சி வழங்கள் – 2020

பட்டதாரி/டிப்ளோமாதாரி பயிலுனராக தம்பலகாமத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (02) தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது
இதன் போது “உயர் செயலாற்றுகையை வெளிப்படுத்தி சிறந்த நடத்தையுடன் பயிற்சியை பூர்த்தி செய்து  வினைத்திறனான அரச பணிகளை மேற்கொள்ள ” வாழ்த்துகளை தம்பலகாமம்  பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தெரிவித்தார்
குறித்த நிகழ்வில் உதவி திட்டமிடல்  பணிப்பாளர் முஜீப் அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  எவ்வாறு கட்டம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டதுடன்  நிர்வாக உத்தியோகத்தரினால் நிர்வாக ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் பயிலுனர்களின் நடத்தை எவ்வாறு இருக்கவேண்டும் போன்ற  விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
தம்பலகாம பிரதேச செயலக பிரிவில் 73 பட்டதாரி பயிலுனர்கள் இதன் போது நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.