கிளிநொச்சியில் காணப்படும் அரியவகை வெள்ளை நாவல் இனம்!!!

கிளிநொச்சியில்  அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது.
உழவனூர் கிராமத்தில் வசிக்கும்  வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது.
குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர் அதனை பிடுங்கி உண்ட போது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன. நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்ற. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே  உள்ளன.
ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக ஆதாவது நெல்லிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன.
பழத்தின் சுவையும் வழமையான பழத்திலிருந்து வேறுபடுகிறது.
குறித்த நாவல் இனம் தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி அரசகேசரியிடம் நாம் வினவியிருந்தோம். குறித்த நாவல் இனம் ஏற்கனவே பூநகரி பகுதியில் 2014ம் ஆண்டுதம்மால் அடையாளம் காணப்பட்டதாகவும், அவ்வினம் தொடர்பில் விவசாய ஆராய்ச்சி இடம்பெற்ற வருவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
குறித்த இனம் ஓர் புதிய வகை இனமல்ல எனவும் இது போன்று பல்வேறு இனங்கள் காணப்படும் நிலையில் நாவல் இனத்தில் இதுவும் ஓர் தனித்துவமான இனம் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.