அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் இறுதிச்சுற்று போட்டியில் பிரதம விருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.(photos)
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி (06) மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசில் வழங்கியிருந்தார்.
மற்றும் இவ் நிகழ்வின் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக யாழ் மாநகர முதல்வர் இ. ஆனோல்ட், கிருபா லேணர்ஸ் உரிமையாளர் ஆ. கிருபாகரன், யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் போட்டி என்பதில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னரான இடைவிடாத முயற்சி ஒரு உண்மையான வெற்றிக்கு வழியாகும்.
நான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு போட்டியில் பங்கு பற்றி இருந்தேன் அது மிகவும் கடினமான போட்டி அப் போட்டிக்கான தீர்ப்பை மக்கள் எழுதினர்கள்.
அதில் வெற்றி பெற்றேன். இவ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மற்றும் வெற்றியடைய தவறியவர்களையும் இணைந்தே எனது “என் கனவு யாழ்” பயணம் தொடரும். அதில் இளைஞர்களுக்கான எதிர்காலத்திட்டம் விரைவில் நனவாகும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை