இன்றைய ராசிபலன்(11/09/2020)
-
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
-
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
கன்னி
கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலர் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.
-
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில், உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு: கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயன் அடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
-
மகரம்
மகரம்: உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: புதிய சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் பெறுவீர்கள்பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
மீனம்
மீனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கருத்துக்களேதுமில்லை