கல்முனை பிரதேச இளைஞர் கழகஉதைப்பாந்தாட்ட இறுதி போட்டியில் அதிலடிக் ஓ சிட்டி இளைஞர் கழகமும் நேஷனல் இளைஞர் கழகமும் மோதவுள்ளன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடாத்தப்படும்  பிரதேச மட்ட இளைஞர்  கழகங்களுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்று இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக கல்முனை பிரதேசஇளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியின் அங்கமாக  உதைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை  சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில்  நேற்று(12 )   இடம்பெற்றது.
இப்போட்டியில் கல்முனை பிரதேச  ஐந்து இளைஞர் கழகங்கள் பங்குபற்றினர்.  இப்போட்டி தொடரில் இறுதி இப்போட்டிக்கு அதிலடிக் ஓ சிட்டி இளைஞர் கழகமும் நேஷனல் இளைஞர் கழகமும் தெரிவாகியது.

இறுதி போட்டிகள் எதிர்வரும் வாரமளவில்  கல்முனை  சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் உதை பந்தாட்ட போட்டியின்  ஆரம்ப நிகழ்வுக்கு கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்  எம். என் .எம் .ரம்ஸான் , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாரக் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் அவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.