தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள் வெற்றியாளர்களாக மிளிர்வோம் – அங்கஜன்!(photos)
ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (19) மாலை யாழ். மாவட்ட கூடுப்பந்தாட்ட சங்க ஆடுதளத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனும் சிறப்புவிருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலகர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக வடமாகண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பா.முகுந்தன், இலங்கை வர்த்தக வங்கி யாழ்ப்பாண கிளை பணிப்பாளர் அ.ஜெயபாலன், யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட செயலகர் தி.கோசிகன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றி அங்கஜன் இராமநாதன் இவ் விளையாட்டு திடல் ஆனது மின்னொளியால் மிளிர்ந்து சிறந்ம மைதானமாக காட்சி தருகிறது. இந்த மைதானத்தை மெருகூட்ட என்னால் முடிந்தவற்றை செய்வேன்.
மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷவுடன் ஏற்கனவே யாழ்,கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டுக்கள் தொடர்பான பல்வேறு முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளோம்.
அவை நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள் வெற்றியாளர்களாக மிளிர்வோம் என நம்புகிறேன்.
இவ்விளையாட்டுக்களில் பங்குபற்றி இன்று வீரர்களாகவும் நாளைய நாட்டின் சிறந்த பிரஜைகளாக மிளிர இளைஞர் யுவதிகளாகிய உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். என்றார்.
தொடர்ந்து போட்டியில் பங்குபற்றி அணிகளுக்கும் வெற்றியிட்டிய வீர, வீராங்கனைகளுக்கும் நிகழ்வின் பிரதமவிருந்தினர் அங்கஜன் இராமநாதனும் ஏனைய விருந்தினர்களும் பரிசில்களை வழங்கிவைத்தனர்.
மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள் நன்கொடையில் விருந்தினர்களால் வீரர்களுக்கு “சிறந்த சுற்றுசூழலை உருவாக்கும்” தொனிப்பொருளில் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கபட்டது.
கருத்துக்களேதுமில்லை