காற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…
காற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், காலதேவனின் அழைப்பில் எம்மைப் பிரிந்தமை கடும் கவலையளிப்பதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பாடகர் எஸ்.பி.பி யின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
“இசை உலகில் அசத்தல் சாதனையாற்றிய மிகப்பெரிய கலைஞன் அமரத்துவம் அடைந்ததால், தமிழ் பேசும் உலகம் மட்டுமல்ல இசை உலகமே ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது.
சுமார் ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடிய அவரது சாதனைகள் காலத்தால் நிலைக்கப்போவது நிச்சயம். அமரர் எஸ்.பி.பி யின் தொண்டைக்குள் எத்தனை மொழிகள் தஞ்சம் கிடந்தன. அவ்வாறான ஒருவர் இன்று நிரந்தர ஓய்வுக்காக மரணத்துக்கு தஞ்சமடைந்து, உலகுக்கு விடைகொடுத்துவிட்டார்.
அவரது இழப்பால் இசையுலகில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் கால இடைவெளியாகவே இருக்கும்.
கலைக்கென்றே இறைவனால் படைக்கப்பட்ட இந்திய மண்ணில், எஸ்.பி.பி போன்ற கலைஞர்கள் உருவாகலாம். ஆனால், அவரது ஆளுமைக்கு ஈடாக எவரும் வளரமுடியாதென்பதுதான் எனது கருத்து.
‘மனிதனால் வெல்லப்பட முடியாதது மரணம் மட்டும்தான்’ என்ற இறைவனது யதார்தத்தில், அவரது பிரிவையும் பொருந்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கவிஞன் மறையலாம். ஆனால், கல்வியோடு இணைந்த கலை, உலகுள்ள வரை நிலைத்தே வருகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் இனி அவரது கலையால் மனக் கண்ணால் அவரைக் காணப்போகின்றனர்.
மொழி, மதம், இனத்தைக் கடந்து, மக்களை ஆட்கொண்ட எஸ்.பி.பி யின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை