சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் – அட்டன் நகரில்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) அட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொது வெளிக்கு வரும்போது முகக்கவசம் அணிதல், சமுக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உட்பட எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்பவே பயணிகள் ஏற்றப்படவேண்டும் எனவும், நாளாந்தம் பஸ்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் அரச மற்றும் தனியார் பஸ்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அட்டன் நகரசபையில் பொதுசுகாதார அதிகாரிகளாலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.