வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!!

வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், கூடி டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வவுனியா சுகாதாரப்பிரிவினரும் பொலிசாரும் இணைந்து இன்று காலை முதல் வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள், தமது சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இதேவேளை, வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சுமார் 2,200 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பேரும் மன்னார் மாவட்டத்தில் 119 பேரும் வவுனியா மாவட்டத்தில் 233 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 பேரும் இந்த வருடத்தில் டெங்கினால் பீடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.