திருமா வளவன் மீது வழக்கு; திரும்பப் பெறுங்கள்! வைகோ வலியுறுத்தல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமைச் சகோதரர் திருமா வளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார் அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.
உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மீது, ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமா வளவன் மீது பதிவு செய்த வழக்குகளை, காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்றார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.