68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மேல் மாகாணம் முழுவதுமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், பாணந்துறை வாழைத்தோட்டம் மீன் சந்தை பிரதேசமும், தெஹியோவிட, இஹல தல்தூவ, பஹல தல்துவ, எபலபிடிய மற்றும் திம்பிரிபொல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை, வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, கொதட்டுவ மற்றும் முல்லேரியா பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும், குலாவிட்ட வடக்கு மற்றும் தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில்ல மற்றும் மகலன்தவ ஆகிய கிராமங்களும், ஹட்டன் உள்ளிட்ட மொத்தமாக நாட்டில் 68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை இரு தினங்களுக்கு திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஅத்தி யாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை