நெல்லிக்காய் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்…
தட்ப வெப்பம் வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகையான காய்களும், கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவை. நமது நாட்டில் அதிகம் விளையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் இருக்கிறது இதனை நெல்லிக்கனி எனவும் அழைக்கின்றனர். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் சிறப்புக்கள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி உண்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய் நன்மைகள் இளமை தோற்றம் நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.
இதயம்
இதயம் உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.
கருத்துக்களேதுமில்லை