கோப்பாய் கல்வியியற் கல்லூரி இன்று முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கும்!
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி இன்று(02)திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக முதலில் மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கி வந்த கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவடைந்து இன்று முதல் இந்தக் கல்லூரி கொரோனா சிகிச்சை நிலையமாகச் செயற்படும் வகையில் சேவைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன என்று பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை