கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மார்க்க சொற்பொழிவும் நேற்று (04) இரவு கலாசார மத்திய நிலையத்தின் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல். றிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.

பள்ளிவாசல் பரிபாலன சபையினர், குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் சிலர் மட்டுமே சுகாதார நடைமுறைகளை பேணி கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் மெளலவி ஏ.எச் நெளசாத் (இஹ்ஸானி) மார்க்க சொற்பொழிவையும் துஆ பிரத்தனையையும் நிகழ்த்தினார்.

 

 

 

(நூருல் ஹுதா உமர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.