கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த யாகம் வளர்த்து விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. முருகப் பெருமானுக்கு தீபமேற்றி மலர்தூபி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், அரச அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை