முறையாக வாக்கு எண்ணிக்கை பதிவானால் வெற்றி பெறுவேன் – ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்இ ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளர். டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். ஜோ பைடன் வெற்றியை நெருங்கியிருக்கிறார். ஆனால் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் தான் செய்த சாதனைகள் அனைத்தும் தேர்தல் வாக்குகளாக மாறியுள்ளதாகவும், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களை தங்கள் கட்சியினர் பார்வையிட அனுமதி வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் முறையாக பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும்;, முறையற்ற வாக்குகள் மூலம் ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இழுபறி நீடிக்கும் அரிசோனா, நெவடா மாநிலங்களில் பைடன் முன்னிலையில் இருக்கிறார். பென்சில்வேனியா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்த மாநிலங்களின் முடிவைப் பொறுத்து தேர்தலின் இறுதி முடிவுகள் அமையும். குறிப்பாக, 20 தேர்வுக்குழு வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.